இளையான்குடி தக்வா டிரஸ்ட்-ன் ஆண்டு செயற்குழு கூட்டம் டிரஸ்ட்-ன் தலைவர் A . செய்யத் மாலிக் தலைமையில் நடந்தது. 2011-2012 ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை டிரஸ்ட்-ன் பொருளாளர் T.M. ஷேக் முஹம்மது சமர்பித்தார்.பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 ) இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே மாதம் திருக்குரான்௦- ஹதீஸ் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டது. அது சமயம் மார்க்க பிரச்சார நோட்டிஸ்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
2 ) தக்வா டிரஸ்ட்-ன் சார்பாக இளையான்குடியில் இன்ஷா அல்லாஹ் குரான் - ஹதீஸ் அடிப்படையிலான மதரசா அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
3 ) தக்வா டிரஸ்ட்-ன் மார்க்க பிரச்சார பொறுப்பாளராக S.F. அஸ்கர் அலி கான் நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.
4 ) டிரஸ்ட் பிரச்சாரத்திற்கும், நிர்வாகத்திற்கும் உறுதுணையாக இருப்பதற்கு மேலும் 6 உறுப்பினர்களை இணைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
5 ) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இப்போதுள்ள நிர்வாககுழுவே தொடர்ந்து செயல்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
M.S. இஸ்மாயில் கான், A. அபூபக்கர் , S. இப்ராகிம், S.F. அஸ்கர் அலி கான் உள்ளிட்ட நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இன்னும் சீரிய முறையில் மார்க்கப்பணியை எடுத்து செல்ல உங்களால் இயன்ற பொருளாதார உதவி தாரீர்
Bank Account Details:
Name: Ilayangudi Thakwa Trust
A/C No: 1469111000002
Branch: Andhra Bank, Ilayangudi
0 comments:
Post a Comment