அட அல்லா! சரிடி.. ஃபோன மொதல்ல வைய்யி..அம்மா
கத்துராக... பேச ஆரம்பிச்சா நிறுத்த்தமாட்டியே..!! வச்சுட்டேம்மா...என அம்மாவுக்கு
பதில் சொல்லியவாரே.. வைய் வைய் நீ சொன்னதுலா நியாபகம் இருக்க்க்கு...சரி சரி....
என அம்மாவின் தொனதொனப்பு பொருக்காமல் ஹதிஜா போனை துண்டித்தாள்..ஏம்மா ராத்திரி
நேரத்துல தொண்டத்தண்ணி வத்த, இப்டி கத்திட்டு இருக்க? என பொய்ச்சடவுடன் அறைக்குள் நுழைந்தாள்.. அந்த ராதிப்புள்ளக்கி போன எடுத்தா
வெக்கெத்தெரியாதெ..என தனக்குத்தானே அம்மா புலம்புவதை கவனிக்காதவளாய்,
கவரை பிரித்து
புதிதாய் வாங்கிய புடவையை தோளில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்..
ஹதி....இன்னும் லைட்ட அமத்தலியாடி..என அம்மா குரல்கொடுக்க... அமத்திட்டேம்மா என்ற
குரலோடு விளக்கை அணைத்துவிட்டு,புடவையை கொடியில் போட்டுவிட்டு உறங்கச்சென்றாள்.
மறுநாள்:பரபரத்தவளாய்!..காலேஜுக்கு
நேரமாச்சுமா...ராதிவேர நேரா காலேஜுக்கே வந்துர சொல்லிட்டா.. நான் கேண்டீன்ல எதாவது
சாப்டுக்கிறேன்.. என சொல்லியவாரே, சைக்கிளை வெளியே எடுத்துக் கொண்டு வேகமாக
புறப்பட்டுவிட்டாள்..அடியே அடியே ஒருவா சாப்டு போடி... அம்மாவின் அடுப்படி
குரலுக்கு, நீ சாப்டுமா என தெருவிலிருந்தே பதில் கொடுத்தவாறு ஹதிஜா சைக்கிளை
அழுத்த..அம்மாவின் குரலும் மெல்ல ஓய்ந்தது..
நேரமாச்சே! என மனதுக்குள் புலம்பியவளாய்,
மூச்சுவாங்க
கல்லூரிக்குள் நுழைந்ததும்,ராதி எங்க என பிறரிடம் விசாரித்துக்கொண்டே வகுப்பறைக்கு சென்றாள்.ராதிகா படு
பிஸியாக அன்றைய கல்லூரி விழாவுக்கான வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஹே ராதி..என உற்சாகக் குரலுடன் அவளை ஹதீஜா
நெருங்க...ஹாய் ஹத்.....திஜா என பேச்சை நிறுத்தியவளாய் மேலும் கீழும்
பார்த்துவிட்டு, முகத்தை திருப்பி வேலையை செய்பவளாய் கோபம் காட்டினாள் ராதிகா.
ஹதீஜா காரணம் புரிந்தும் மழுப்பலாய்,ராதி எவ்ளொ வேலடி முடிஞ்சுருக்கு என பேச்சை
குடுக்க.. ஹேய் நா யார்க்கிட்டையும் பேசவிரும்பல, என்னய தொந்தரவு பண்ணவேணாம்ன்னு சொல்லிடு,
என ஹதிஜாவை
முறைத்து கொண்டே அருகிலிருந்தவளிடம் சொல்லிவிட்டு ராதிகா நகர்ந்தாள். அதன்பின்
அன்று மாலை வரை ஹதிஜாவை பலமுறை பார்த்தும் பேசாது ராதிகா விலக... காரணம்
புரிந்ததால் ஹதிஜாவும் பார்க்கும்போதெல்லாம் சிரித்துவைத்துவிட்டு,
வீட்டுக்கு
போகும் நேரத்திற்காக காத்திருந்தவளாய், விழாவில் அதே சிந்தனையுடன் சுற்றிவந்தாள்...
விழாவும் முடிந்து கிளம்பும் நேரம் வந்ததும், ராதிகா எல்லாரிடமும் விடைபெற்றுவிட்டு,
யாரையோ தேடியவாறு,
வேகவேகமாக
சைக்கிளை நோக்கி ஓடினாள்... ஹதிஜா, ராதிகாவின் சைக்கிளில் அமர்ந்தவாறு,..
வாம்மா மகாராணி
என கேளிபேசி பேச்சை ஆரம்பித்தாள், ராதிகாவும் அதற்குமேலும் பேசாமலிருக்க
முடியாதவளாய்...ஒரு கனம் தாமதித்து... உன்கிட்ட எவ்ளோ தடவடி சொன்னேன்..
மெனக்கெட்டு ஃபோன் பண்ணிவேர சொன்னேனேடி..இப்டி பண்ணிட்டியே! என முகத்தில்
கடுகுவெடிக்க... எதும் அறியாதவள் போல்,என்னடி ஆச்சு..என விஷயத்தை அவள் வாயிலிருந்து
துவங்கும் முகமாக கேள்வி கேட்டாள் ஹதிஜா...
போடி..எவ்ளோ ஆசையா நம்ம ரெண்டு பேரும் சேந்து பொடவ
எடுத்தோம்.நீ இப்டி பண்ணுவன்னு தெரிஞ்சுதான ஃபோன்பண்ணி அவ்ளோ சொன்னேன்..சொல்லியும்
இப்டி பர்தா போட்டுட்டு வந்து நிக்கிறியே ஹதி...ஒரு நாள்தான... பாத்துட்டு புடவ
சூப்பரா இருக்குன்னு சொல்லாதவங்களே இல்ல தெரியுமா... நீனும் இதே மாதிரி
வந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்துருக்கும்...அப்டி என்னதாண்டி இதுல இருக்கு...
நாங்கல்லா சாதாரணமா இல்லையா... ஒடம்ப காட்டிகிட்டா திரியுறோம்... இப்டி முழுச
மறைச்சாத்தான் ஆச்சா?... என பொறிந்து,பின் ஏதோ தவறாய் பேசியதாய் உணர்ந்து பேச்சை
முடக்கினாள் ராதிகா..
ஹதிஜா மௌனப்புன்னகையுடன் ராதிகாவின் முகத்தையே
பார்த்துக் கொண்டிருந்தாள்..கோவம் தணிந்து வருத்தம் மேலிட.. ஸாரிடி... இருந்தாலும்
நீ இப்டி பண்ணிருக்ககூடாது என நிதானமானாள் ராதிகா.. இந்த சமயத்துக்காய்
காத்திருந்தவள்போல் ஹதிஜா பேசத்துவங்கினாள்...
ராதிகாவை இயல்புநிலைக்கு கொண்டுவர,.. ஹதிஜா, பொய்சிரிப்போடு... ராதி...ஏய், ப்ச், இங்க பார்டி... இன்னக்கி ஒருநாள் போடாம இருந்தா என்னான்னு கேக்குற... இது நாங்க போடுர யூனிஃபார்ம்ன்னு நெனச்சிக்கிட்டியா என்ன? இன்னைக்கி லீவுதானே, வேர போட்டா என்னான்னு கேக்க??...என்றதும்,... இல்லப்பா அப்டில்லா நெனைக்கல,என ராதிகா சிறு தவிப்புடன் பதிலளித்தாள்... தொடர்ந்து ஹதிஜா....அப்படியா? சரி! அப்போ பர்தா எதுக்காக நாங்க போடுறோம்? சொல்லேன்...என விளையாட்டுத் தனமாக கேள்விகளை தொடர்ச்சியாக கோர்க்க...
ராதிகா, யோசித்தவளாய்!!!,.. என்ன? உங்க மத்துல
பொம்பளைங்க மட்டும், இப்டித்தா இருக்கனும்ன்னு சொல்லிவச்சுருக்கு,அத கட்டாயம்
ஃபாலோப் பண்ணனும்ன்னு செய்யிரீங்க... இதுனால என்ன பெனிஃபிட்? பாரு
நாங்கள்லா எவ்வளவு சுதந்திரமா இருக்கோம்...நீங்க அப்டி இல்ல.. அப்டி நீங்க இருக்க
உங்க மதமும் அனுமதிக்கல,... விதியேன்னு போட்டுட்டு இருக்கீங்க... இல்லயா? என பொடிவைத்து
புன்முறுவலுடன் பதிலளித்தாள்...
ராதிகாவின் இந்த கிண்டல்,அவள் இயல்புநிலைக்குத் திரும்பியதை உணர்த்த,..ஹதிஜாவும் தன்னை விவாதத்திற்கு
தயார்படுத்தியவாளாக.. ஹ்ம்..சரி நான் ஒன்னு கேக்குறேன்,சொல்லு..எனத் தொடர்ந்தாள்... சொல்லப்படும் ஒரு
விஷயம்,அதை செய்யிறோம், செய்யல.. மொதல்ல அது அறிவுக்கு பொருந்தக் கூடியதா?
இல்லையாங்கிறத
வச்சுத்தானப்பா அது கட்டாயமா? இல்லையான்னு முடிவுக்கு வரமுடியும்... அறிவுக்கு
பொருந்தாத ஒன்னு, மதத்துல சொல்லியிருந்து, எங்க பெரியவங்க அதத் தெரிஞ்சும் செய்ய சொல்றதுக்கு பேரு கட்டாயம். இல்லையா?...
எனக்கேட்க,வழிமொழிவது போல் தலையசைத்த வண்ணம், ராதிகா
ஹதிஜாவை, தொடர்ந்து பேச அனுமதித்தாள்.. ஒருவேல அதுவே
அறிவுக்கு பொருந்துவதாக இருந்தால்? யாரும் செய்ய மறுப்போமா?..இல்ல அப்டி செய்யிரவங்களுக்கு,
கட்டாயம் இத
செய்யின்னு யாரும் சொல்லனுமா?..
பர்தாவ நாங்க அப்படித்தான் போடுறோம் ராதி..
அதுனாலதா இந்த கருப்புத்துணிய எவ்வித சலனமும் இல்லாம காலம் முழுசுக்கும்
போட்டுக்கிறதுக்கு மனசு வருது...சரி கட்டாயம்ன்னு ஒனக்கு யாரு சொன்னா?
சொல்லு?
என ஹதிஜா
கேட்க....
யாரும் சொல்ல்லப்பா..என் மனசுல பட்டத
சொன்னேன்..என ராதிகா சொல்லிமுடிக்கத்தாமதியாது..,ஏன்?... என கேள்வியை கொடுத்து,
தொடர்ந்து
ராதிகாவை பேசவிட்டாள் ஹதிஜா...
ஏன்னா...என்ன சொல்றது?. என்னயவே
எடுத்துக்க..எல்லாரும் மாதிரித்தா நானும் ட்ரஸ் பண்றேன்.. நீ பர்தா போட்டுட்டு
வர்ர.. நீ என்ன சாதிச்சுட்ட,நான் என்ன சாதிக்காம போயிட்டேன்.. உன்னப் போல
பர்தா போடாத்தால,எனக்கு ஒழுக்கம் இல்லாம போச்சா? இல்ல
வேரெதாவது பாதிப்பு வந்ததா? அப்டி இருக்கும் போது அதிகப்படியான உடை
அவசியமில்லாது, அதை செய்வது கட்டாயத்தின் காரணமாகத்தான்னு
நான் நெனக்கிறேன் என்றாள்...
ரொம்ப சரியான பாயிண்ட் ...சரி நா ஒன்னு
கேக்குறேன்,இப்போ நீ உடுத்திருக்கிற இந்த சேலை.., சரியான, போதுமான உடைன்னு நீ சொல்றியா?
என ஹதிஜா
சொல்லிமுடிக்கும் முன்னமே,... கொஞ்சமும் யோசிக்காதவளாய், ஆமா அதுக்கேன
கொரச்சல்... இது போதுமானதா இல்லையா? என, தன் சேலையை தன்னை அறியாமலே சரிசெய்த வண்ணம்
ராதிகா கேட்குபோதே...ஹதிஜா இடைமறித்து... ஹே ஹே, இரு இரு.. கேக்குறேன்னு தப்பா நெனைக்காத.. இப்போ
ஏ சரி செஞ்சுக்கிட்ட? என்றாள்...
ராதிகா,ஏதும் புரியாதவளாய்!!! ஹதீ...... இதென்னடி
கேள்வி, மறைக்கிர எட்த்துல இருந்து ட்ரெஸ் வெலகுனா, சரிசெய்யாம
என்ன செய்வாங்களாம்ன்னு சொல்லும்போதே..ஏதோ புரிந்தவளாய் சுருதியை குறைத்தாள்...
ராதி, முதல் விசயம்.. ஏன் சரி செய்யிறோம்?
நம்ம உடம்ப
மத்தவங்க பார்க்கிறத நாம விரும்பல அப்டித்தான...ராதிகா தலையசைக்கத் தாமதித்து,..
தொடர்ந்தாள்
ஹதிஜா... இதுல குறிப்பாக ஆண்கள்,பொதுவாக அன்னியர்கள் எல்லோருமே பார்க்க,
நாம்
விரும்பாதோர்தான் இல்லையா? என்ற கேள்விக்கும் இயல்பாக ஆமா போட்டுக்கொண்டிருந்தாள்
ராதிகா...
இந்த உணர்வு நம்ம எல்லாருக்குமே கூடவே பொறந்தது,இதுல எதாவது தப்பு இருக்கா?இல்லன்னு ராதிகா வாயெடுக்க,
முந்தியவளாய்
ஹதிஜா, இல்லல்ல... இப்போ நான் பர்தா போட்டுருக்கேன்,நீ சேல கட்டிருக்க... சேலை உன்னோட 80 சதவிகித
உடம்ப மறைக்கிது. மீதமுள்ள 20 சதத்துல, 5 முதல் 10 சதவிகித அங்கங்களை மறைக்க வேண்டியே
ஒன்னோட கை ஓய்வில்லாம வேலபாக்குது.ஆக மொத்தம் 90 சதவிகித உடல மறைக்கனும்கிறது தான்
உன்னோட எண்ணமும்..இப்போ என்னோட பர்தாவ பாத்தின்னா, முகம், கை என அவசியம் வெளியே தெரியவேண்டிய உறுப்பை தவிர,
மொத்த ஒடம்பையும்
100 சதவிகிதம் மறைக்கிது, இல்லயா?
பர்தாவ தப்புன்னு சொல்ற உனக்கும், சரின்னு சொல்ற எனக்கும் இந்த 10 சதவிகித
கருத்துவேறுபாடுதாம்பா இருக்கு.
அட ஆமா! என மனம் சொன்னாலும், மௌனமாக ஹதிஜா
பேசுவதை கவனித்துக்கொண்டு, கண்களால் மட்டும் வழிமொழிந்து கொண்டிருந்தாள்
ராதிகா...
இப்போ இந்த பத்து ப்ளஸ் பத்து சதவிகித
வேற்பாடுல...முதல்பத்து சதவிகிதம் மறைக்கனும்னு உனக்கு தெரிஞ்சதால அத
சரிசெய்யிர..மீதம் இருக்கும் பத்து சதவிகிதத்த நீ இயல்பா கண்டுக்காம விட்டுடுர...
நான் அதையும் மறைக்கிறேன்.
உதாரணமா..நீ சரியா சேல கட்டி இருந்தாலும்,அவசியமில்லாம முதுகுப்பகுதியும்,
இடுப்பும்,
கழுத்துப்பகுதியும்,கைகளில் பெரும்பகுதியும் திறந்து
இருக்கு...இதுக்கு எதாவது பிரத்தியேகக் காரணம் இருக்கா?
என ராதிகாவின்
மௌனம் கலைக்க, தனது பேச்சை கேள்விக்குறியில் நிறுத்தினாள் ஹதிஜா..ராதிகாவோ அது, அதுவந்து...என காரணம் அறியாதவளாய்
அப்போதுதான் ஏன் என தனக்குள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க... ப்ச்...
தேவயில்லதா... ஆனா எல்லாரும் அப்டித்தான கட்றோம்.. என சமாளித்தாள்...
ராதி...ஒன்னு கவனிச்சியா! அவசியம் ஏற்பட்டா,
பொதுவுல
மேல்சட்டைகூட இல்லாம வேலை செய்யும் ஆண்கள்கூட தங்களுடைய சாதாரண ஆடைல இப்படி
இடங்களை வெளிக்காட்டுவதில்லை... உயிரே போனாலும் ட்ரெஸ்ல சமரசம் செஞ்சுக்காத நாம
ஏன் இந்த இடங்கள தேவையில்லாம வெளிக்காட்டுறோம்? இப்டி திறவையா இருக்கும் இடங்கள் 10
சதவிகிதம்ன்னா, இந்த பத்து சதவிகிதத்தாலதான் மீதமுள்ள 10
சதவிகித அங்கங்கள் அதிகப்படியா விலகி வெளித்தெரியுது...
ஆக, நீ உட்பட நம்ம மக்கள் பயன்படுத்தக்கூடிய ஆடைல
இருக்கிற திறப்புகள் அவசியமில்லைன்னும், அதுதான் அதிகப்படியான திறப்புக்கும் காரணம்ன்னு
புரியுதா?... இப்படி ஆடை உடுத்தப்பழகியதாலயே,
நம்ம மக்களுக்கு
ஆடைய சரி செய்யிரது அனிச்சை செயலாவே மாறிடுச்சு.இந்த சரிசெய்யும் வேலையே நம்ம ஆடை
முழுமையா இல்லைங்கிரதத்தானே காட்டுது...முழுமையா உடம்ப மறச்சு இருந்தா,இந்த வேலையே தேவையில்லதேன??..
எனவும்... ராதிகா ம்ம் என்ற வார்த்தையோடு
நிறுத்திக்கொண்டாள்..
இப்போ நீ ஏதோ ஒரு வேலய மும்மரமா பாத்துட்டு
இருக்க.. உன்ன சுத்தி பத்து பசங்க இருக்காங்கன்னு வச்சுக்கயே,உன்னோட பாதி கவனம்,
எங்க நம்ம ட்ரெஸ்
எங்கயும் வெலகி இருக்குமோங்கிறதுலயே இருக்கும்.வேலைல முழுமையா இயங்க முடியாது. ஒருவேல
நீ வேலைல கவனமா இருந்தா போச்சு...உன் ட்ரெஸ் வெலகி இருக்கிறத உன்னத்தவிர எல்லாரும்
கவனிச்சிருப்பாங்க..ராதிகா முன்னொரு முறை தனக்கு இப்படி நடந்ததை மனதில் கொண்டு பேச
வார்த்தையில்லாமல் உதட்டை சுழித்தாள். ஹதிஜா தொடர்ந்து.. இதுவே முழுமையா உடம்ப
மறச்சு இருந்தா..சுத்தி யார் இருந்தாலும் நாம நம்ம வேலைய பாக்கலாம்..இல்லையா?
என்றாள்.
ராதிகாவோ..தன் நீண்ட அமைதியும்,பதில்
பேசாமலிருப்பதும்,தான் பர்தாவின் கூற்றை ஏற்கும் நிலைக்கு
வந்துவிட்டோமோ,என சுதாரித்து...உடம்ப மறைக்கிறெதெல்லாம்
சரி..ஆனா அவங்கவங்க போட்டுக்கிற ட்ரெஸ்ஸ அவங்க தேர்வு செய்ய உரிமை இருக்கு...
இதுதா என்னோட கருத்து.இதுல எந்த மாற்றமும் இல்ல...எனச் சொல்லி தன்னை இக்கருத்தில்
இருந்து மீட்டுக்கொள்ள முய்னறாள்......
ரொம்ப சரியா சொன்ன ராதி.. நிச்சியமா என்னோட கருத்தும் அதுதான்.நம்ம ட்ரெஸ்ஸ
நாம தேர்வு செய்ய முழு உரிமை நமக்கே.. சரி நீ உன்னோட ட்ரெஸ்ஸ தேர்வு செய்யிர,நல்லதாவே... ஓக்கெ... அதேமாதிரி நம்ம ஃபேஷன் குயினையும், அவங்க
விருப்பத்துக்கே ட்ரெஸ் செலக்ட் பண்ண சொல்லிடலாமா? என அவர்களது வகுப்பிற்கு வரும் ஒரு ஆசிரியை
குறித்துக் கேட்டாள் ஹதிஜா.. உனக்கு ஏண்டி இந்த வம்பு? அவங்க போடுரதெல்லா ட்ரெஸ்ஸா?? அந்தந்த ப்ரொஃபஷன்க்குன்னு ஒரு மரியாத இல்லயா? என ராதிகா மறுதலித்தாள்...ஏன்? என்ற ஹதிஜாவின் கேள்விக்கு, ஆசிரியர்
பணி புனிதமானது, அவக இந்த
வேலைல இல்லைன்னா, என்னவேண்ணா
போட்டுக்கலாம்.. என்றாள் யோசனையாய்...
என்னப்பா இப்டி சொல்ற..ஒரு தொழிலுக்கு இருக்கிற மரியாதை,புனிதம்...
மனிதனுக்கும், அவனது மானத்துக்கும் இல்லயா?? அப்டீன்னா ஒருத்தரோட ப்ரொஃபஷன் தான் அவங்களோட
ஆடையை, தீர்மானிக்குதா? அப்டிப்பாத்தா, நீ சொன்னமாதிரி அவங்கவங்க தன் ஆடையை தீர்மானிக்கலாம்கிறா உன்னோட வாதமும்
அடிபடுதே...தொடர்ந்து,அப்போ அவங்கவங்க தன் ஆடைய தன் இஷ்ட்டப்படி தீர்மானிக்கிறதும் சரிப்பட்டுவராது
இல்லையா என்றாள் ஹதிஜா.....
ஹதிஜா
தன்னை கார்னர் செய்வதில் இருந்து தப்பிக்க...ம்ம்ம் நான் அப்டி சொல்ல்வரல.... அவங்கவங்க தன் ஆடைய
தேர்வுசெய்யலாம், அதுக்காக
ஒரு வரைமுற இல்லயா?...என ராதிகா
பேச்சை இழுத்தாள்..
ம்ம்..அப்போ ஆடைல வரைமுறை வேணும்கிற..என்றதும்.. ம்ம்..எல்லாரும் நல்லா
ட்ரெஸ் பண்ணுனா ஓக்கே....இப்டி ஆளாலுக்கு முடிவெடுத்தா?... வரைமுறைவேண்டும்தான்...என
ராதிகா ஒப்புக்கொண்டாள்... சரி. நீயே அந்த வரைமுற என்னான்னு சொல்லு.. என ஹதிஜா கேட்க...என்ன பெருசா?... நான் நல்லாத்தான உடுத்துறேன்..என்னமாதிரி போதும், என்றாள் குழந்தைத்தனமாக...
இதை கேட்டதும் ஹதிஜா சிரித்துவிட்டு,என்னடி இது? உன் வரைமுறை மாதிரி, நாட்ல
ஒவ்வொருத்தியும் ஒரு வரைமுறை வச்சுருந்தா, யாரு யாரோடத ஃபாலோப் பண்றதாம்... இங்க நீ இப்டி
சொல்ற, நார்த்திண்டியாக்காரி வந்து எனக்கு ஸ்லீவ்லெஸ்’ம்பா, அரபுநாட்டுக்காரி
மொகத்த மூடனும்பா, அமேரிக்காகாரிவந்து மொத்தமும் துறக்கனும்பா... உன்னோட வரைமுறை
தப்புன்னு இவங்க சொல்லுவாங்க. அப்ரம் நீ சொல்ரமாதிரி யாரு கேப்பா? சொல்லு...
தனிப்பட்ட மனிதனின் கருத்து ஒருவருக்கொருவர் வேறுபட, அனைவருக்கும்
பொருந்துமாறு எல்லாக் காலத்திற்கும்,குறிப்பாக அணிபவருக்கு, ஆடை அதன் கடமையை
முழுமையாக செய்யும் வண்ணம் தெரிவு செய்வதே அறிவுப்பூர்வமாது இல்லயா?.. இஸ்லாம்
வலியுறுத்தும் ஆடை வரைமுறை அதைச் செய்வதால்... என ஹதிஜா பேசிக்கொண்டே போக... ராதிகா இடைமறித்து...
அதுக்காக
இந்த கருப்புத்துணிதான் எல்லாத்தையும் சரி செய்யுமா?..இது நீ சொன்னமாதிரி, எல்லாரும் யூனிபார்ம் மாறில்ல போடுரீங்க.. என தனக்கு ஒரு
பேச ஒரு பாயிண்ட் கிடைத்ததாக ஆர்வம் காட்டிக்கொண்டாள்.
ஹதிஜாவோ!.. ட்ரெஸ் கலர் ஒரு பொருட்டே இல்லப்பா...எந்த கலர் வேண்ணாலும்
போடலாம்... எங்க மதத்துல ஆடைன்னா இன்னின்ன வரைமுறைகளைக் கொண்டிருக்கனும்ன்னு
இருக்கு, அந்த வரைமுறைய எந்த ஆடை பூர்த்தி செய்தாலும் ஓக்கேதான்..அது என்னான்னா..
முகம், கை தவிர முழு உடலும் மறைந்து இருக்கனும்,
கண்ணாடி போன்ற
மெல்லிய ஆடையாக அது இருக்கக்கூடாது.
அப்ரம் உடலோடு
ஒட்டி,உடல் அங்கங்களை காட்டும் ஆடையாக இருக்கக்
கூடாது..
எதிர்பாலினத்தை
தன்வசம் கவரும் வகையான ஆடையாக இருக்கக்கூடாது...
இது உடலை
மறைப்பது தொடர்பாக ஆடை விஷயத்தில் சொல்லப்படும் எங்க மதகோட்பாடுகள்.. நான்
சொன்னவைகள பூர்த்தி செய்யும் எந்த ஆடையும் பர்தாதான் ராதி...இந்த கோட்பாடுகள்ல
எதாவது உனக்கு கருத்து வேறுபாடு இருக்கா?..என ஹதிஜா கேட்க....
இரு
ஒன்னொன்னா வர்ரேன், என அவற்றை
புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்வது போல, ஏதாவது தவறு கண்டுபிடிக்கலாம் என ராதிகா அதை அலசத்துவங்கினாள்...
முகம்,கை தவிர மற்ற இடங்கள்
திறந்து இருப்பது தேவையற்ற ஒன்றுதான்.. இதப்பத்தி நீ சொன்னதுக்கப்பரம்தா, என்னையறியாமயே நானுமே அப்டி
உடம்ப மறைக்கிறத, விரும்புறத
தெரிஞ்சுக்கிட்டேன்னு சொன்னவள்... போச்சா..நாமளே மொத பாயிண்டுக்கு பாராட்டு
பத்திரம் குடுத்துட்டோமேன்னு தனக்குள் விளையாட்டாக நொந்துகொண்டு... அதுக்காக
பர்தாதா சரின்னு சொல்லவரல..என சமாளித்துக்கொண்டாள்...
ஹதிஜாவோ தனது பாயிண்டை ராதிகா ஏற்றுக்கொண்ட உற்சாகத்தில் ம்ம் அடுத்து..என
ஆர்வம் காட்டினாள்..
அடுத்து,ட்ரான்ஸ்பரண்ட் ட்ரெஸ்ல
எனக்கும் சுத்தமா உடன்பாடில்லப்பா.. அதேமாதிரி பாடி ஃபிட் ட்ரெஸ்ஸும் எனக்கு
சுத்தமா புடிக்காது,ஒனக்கே
தெரியும்..ஸோ ரெண்டும் ஏத்துகக்கூடியதுதான்..
அப்ரம்...என ஹதிஜா தன் மனதுக்குள் குதூகலிப்பதை வெளிக்காட்டாமல்... ம்ம் கடைசி
என்ன? என்றாள்...
ராதிகாவோ,கடைசிக் கோட்ப்பாட்டில்
முற்றாக முரண்படவும்,அதோடு
ஹதிஜாவின் மனதை அறிந்தவளாய், அவளது
குதூகலிப்பை நிறுத்தவும்,.. ஹதி..அந்த
கடைசி கோட்பாடுல எனக்கு சுத்தமா உடன்பாடே இல்லப்பா..என சொல்லிவிட்டு, ஹதிஜாவின் முகத்தில்
எதிர்வினையை எதிர்பார்த்தாள்..
ஹதிஜாவோ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்..ஏனாம் மகாராணிக்கு அதுல என்ன
சந்தேகமாம்.. என கிண்டலாக கேட்க...
பின்ன..நம்ம ட்ரெஸ் எல்லாம்
கண்ணை கவரக்கூடியதாத்தான இருக்கு.அப்டி உள்ளதத்தான நாமளே பாத்து எடுக்குறோம்.ஆக
நாம போடுர ட்ரெஸ் பிறர கவரத்தான் செய்யும்.அதுனால என்ன? மதத்தவங்க முன்னாடி நாம அழகா
தெரிஞ்சா என்ன பிரச்சன ஹதி...இபடி ஒரு கோட்பாடு இருந்தா..நாம நமக்கு பிடிச்சத
வாங்கவோ,வாங்கினா
உடுத்தவோ முடியவே முடியாதே... அப்ரம்??? என ஹதிஜாவின் பதிலை வாங்க... நிறுத்தினாள்…
ஹ்ம்..நீ சொல்றது ஒரு வகைக்கு சரிதான்..நம்ம ட்ரெஸ் எல்லாமே பிறரது கண்ணைக்
கவரக்கூடியதுதான் ராதி... ஆனா அதுக்காக அதெல்லாம் போடவே முடியாதுன்னு இல்ல.இந்த
ஆடை வரையறை எல்லாமே அன்னிய ஆண்களுக்கு மத்திலதானே...அவங்க முன்னாடி நாம
அவங்களுக்கு அழகா தெரியனும்ன்னு அவசியமா? இல்லையே.. ட்ரெஸ் நாம நமக்கு புடிச்சுதான எடுக்குறோம்??...இல்ல பிறர்
பாராட்டனும்ன்னு எடுக்குறோமா? அப்படியான ட்ரெஸையும், அதுனால மிளிரும்
அழகையும், நாமும் நமை சார்ந்தவங்களும் பாத்து சந்தோஷப்பட்ட போதாதா?
அத கட்டிக்கிட்டு தெருவுல நடந்து,நாலுபேரு ஜொள்ளுவிட்டா உனக்கு ஓக்கேவா?எனக் கேட்க... ராதிகாவோ.. அது நமக்கு
கெத்து தானே... நாலுபசங்க நம்ம பின்னாடி சுத்துனா?ன்னு சொல்லி சிரிக்க...ஹதிஜாவின்
முகம் மாறியது...
ராதிகா
சுதாரித்தவளாக...அம்மா தாயே டென்ஷாயிடாத,என்னப்
பத்தி தெரியாதா...எனக்கும் இதெல்லா பிடிக்காது தானே!! சும்மாதா சொன்னேன்... நீ சொல்லு.. என்றாள்...
ம்ம்ம்ம்....அந்த பயம் இருக்கட்டும்...மவளே எதாவது பேசிருந்த இன்னைக்கி உனக்கு
தீவாளி கொண்டாடிருப்பேன்..என விளையாட்டாய் மிரட்டிவிட்டு... தொடர்ந்தாள்...
ஆக நாம பிறர் நம்மல வாய்பிளந்து காட்சிப்பொருளா ரசிக்கிறத விரும்பாதவங்களா
இருக்கும்போது,அன்னியர் முன்னாடி நாம அழகுப் பதுமையா வலம்
வரனும்ன்னு தேவையா??
ராதிகா,..ஆமோதித்துக்கொண்டிருந்தாள்...
சரி இவ்வளவையும் பூர்த்திசெய்யும் படியான ஆடை எதாவது இருக்கா ராதி..என அவளிடம்
ஹதிஜா கேள்வி வைக்க...
ராதிகாவோ...விவாதித்த அனைத்தையும் ஒரு கணம் யோசித்தவளாய்... இருக்குப்பா ஆனா
இல்ல... என்றாள்...
இதென்ன...சினிமா டயலாக்லாம் விட்டுட்டு
இருக்க... சொல்லு.. இருக்கா? இல்லையா? என விளையாட்டாய் கடிந்துகொண்டாள்...
ப்ச்...ஹதி...நான் சொல்லவந்தது..இன்னும்
அப்படியான சில உடைகள் இருக்கு,ஆனா அவை தற்கால உபயோகத்திற்கு தக்கவாறு
பொலிவு பெறாததால,அவை ஓல்ட் ஃபேஷன் கேட்டகிரிக்கு
போயிடுச்சு...அதத்தா புத்திசாலித்தனமா சொன்னேன்..உனக்கு புரியல...என ராதிகா கிண்டலாய்
சீண்டினாள்..
ஹதிஜா..சிரிப்பை பாவனையில் காட்டிவிட்டு,அங்கலாய்ப்புடன்...ஹ்ம்ம்,
ஆமாப்பா நீ
சொல்றது சரிதான்....சில சுடிதார் வகைகள்,அப்ரம் பாட்டியாலா போன்ற ட்ரெஸ்லாம் ஓரளவு இந்த
வரைமுறைக்குள்ள வரும்...ஆனால் அதுகள்ளையும் ஃபேஷன் புகுந்து இப்போ முறையான
சுடிதார்கள் கூட கெடக்கிறதில்ல...அப்டி ஒரு முழுமையான ட்ரெஸ்ஸ் இல்லாததாலதான இது
என தன் பர்தாவை காட்டினாள்...
இதைக்கேட்கும்போதே ராதிகாவுக்கு ஓரளவு
புரிந்தது...பர்தா எனும் மேலாடை, இந்த பற்றாக்குறையை பூர்த்திசெய்ய வந்ததுதான்
என்று... ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல மனம் வராமல்....ம்ம்..என நிறுத்திக்கொண்டாள்...
(ஹதிஜா தொடர்ந்து....) சரி அதெல்லா
கெடக்கட்டும்..இப்போ சொல்லு. பர்தா பத்தி என்ன நெனக்கிற.. என்றாள்...
இதுக்குள்ள இவ்ளோ விசயம் இருந்தாலும்,உடல்
மறைக்கனும்கிற எண்ணம், உங்களுக்கு உங்க மதம்தா கொடுத்தது இல்லயா? அது இல்லைன்னா
உங்களுக்கு அந்த எண்ணமும் இல்ல,பர்தாவும் இல்ல.... அப்டியா? என்றாள்...
அஃப்கோர்ஸ் டியர்...அப்டீன்னு உற்சாகமாக ஹதிஜா
பதிலளிக்க.. ராதிகாவோ.. விழி விரிந்தவளாக.. ஏண்டி அப்போ
உங்களுக்கு சுயபுத்தியே கெடையாதா?.. ஒளர்ர என்றாள், காட்டமாக..
ஹதிஜா சலனமில்லாமல்,
சிறு
உதாரணத்துடன் பதிலளித்தாள்...கூல் டியர்...எல்லார்க்கும் சுயபுத்தி இருக்கு...ஏன்?
உனக்கு
இருக்கே... எது சரி எது தப்புன்னு உனக்கும் தெரியுமே... இருந்தாலும் ஏன் உங்கம்மா
அப்பா சொல்றத கேட்டு நடக்குற?. அவங்க சொன்னாத்தா உனக்கு தெரியுமா??..உனக்கு சுயபுத்தி இருந்தாலும்,அவங்க சொல்ரத தட்டாம ஏன் நடக்குற... என கேள்வி
வைத்தாள்..
ராதிகாவோ...ஏன்னா அவங்க என்னய
பெத்தவங்க...அவங்களுக்கு தெரியும் எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு...எம்மேல
அவங்களுக்கு அக்கர இருக்கு..பாசம் இருக்கு,அவங்க சொல்றது நல்லதாத்தா இருக்கும்...அதனால
கேக்றேன் என்றாள்...
நம்மல பெத்தவங்களுக்கே நம்ம மேல இவ்ளோ
அக்கரையும் பரிவும், பாசமும், கவனமும் இருக்கே, அப்போ, நம்மையும் நம்மள பெத்தவங்களையும் படைச்ச இறைவன் எலலார் மேலையும்,
கண்டிப்பா அவங்கள
விட பாசம் அக்கரை கொண்டுள்ளவனாகத்தான இருக்கமுடியும்??
ம்ம் ம்ம்..சரிதான் சொல்லு,,என்றாள்
ராதிகா,,..
இஸ்லாத்துல சொல்லி இருக்கிற விஷயங்கள் எல்லாம்,
என்னையும்
உன்னையும் படைத்த இறைவன் நமக்கு கொடுத்த செய்திகள்தான்...இதில் பர்தா குறித்த
செய்தியும் ஒன்று...ஒருவேலை அல்லாஹ் இவற்றை எல்லாம் சொல்லாமல் இருந்திருந்தால்,இவ்வுலக பகட்டான வாழ்க்கைக்கு நானும் பலியாகி,
மாடர்ன்
மங்கையாகியிருப்பேன்..சொன்னது மட்டும்தான் வேறெதும் இல்லைன்னாலும்.. நான் கொஞ்ச
காலத்தில் அதை மதிக்காமல் “ப்ச் என்ன ஆகிடப்போகுது.. பாத்துக்கலாம்னு” மாறியிருப்பேன்...ஆனா நமக்கு வழிகாட்டிய
இறைவன்..நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தவும், கண்காணிக்கவும் செய்யிரதோட இல்லாம,அதக்கொண்டு நமக்கு நாளை தீர்ப்பு
வழங்குபவனாகவும் இருக்கைல.... எப்படி எந்த ஒரு தவறையும் செய்யமுடியும்..??
நம்ம பெத்தவங்க சொல்ரத கேட்டா நமக்கு நல்லது
நடக்கும்ன்னா..எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நடந்தா?...நான் என்னோட உலக வாழ்க்கைலையும் சிறப்போட
வாழுறேன்.. அத்தோட என்னைபடைத்த இறைவனுக்கும் நான் பிரியமானவளா போயிடுறேனே.. இது
எனக்கு கொடுப்பன இல்லயா.. அப்டி இல்லாம என் இஷ்ட்டத்துக்கு நடந்தா..அதன் பாரதூரமான
விளைவுகள உலகத்துலயும் அனுபவிக்கனும், அல்லாஹ்வுக்கும் பாவியாத்தா போகனும்... இப்டி
இருக்க எனக்கேன வந்துச்சு ராதி??? என்றாள்..
ஓ....பரவாயில்லப்பா.. இதுல இவ்ளோ விஷயம்
இருக்கா... நான் கூட மேலோட்டமா கருப்புத்துணியப் பாத்துட்டு..அடிமைத்தனம்ன்னு
முடிவு கட்டிட்டேன்.. ஆனா இது அதையும் தாண்டி இறைபக்தி நிலைக்கும் கொண்டு போர
விஷயமாவுல இருக்கு என ஆச்சரியப்பட்டாள்..
ஆமா ராதிகா...இஸ்லாம் மற்ற மதங்களப்போல இல்ல,ஆன்மீகம் தனியா லௌகீகம் தனியான்னு... இஸ்லாமிய
மார்க்கமே, உலக மற்றும் ஆன்மீக வாழ்க்கைய தனித்தனியா பிரிக்கமுடியாத அளவுக்கு கலந்த
ஒன்றாத்தான் நமக்கு கொடுக்கப்பற்றுக்கு....
ஆனா இத பலபேர் விமர்சிப்பாங்க..ஹ்ம்..ஒரு வேல
சாப்பாடு கூட இஸ்லாம் சொன்ன மாதிரித்தா திம்பானுக இவனுகன்னு...அப்டீன்னு...ஏன் நம்ம இஷ்ட்டத்துக்கும் சாப்பிடலாமே.. ஆனா
அந்த சின்ன வேலையக் கூட இஸ்லாம் சொன்ன வழில செய்யும்போது அதுக்கும் நமக்கு இறைவன்
புறத்துல இருந்து நன்மை கிடைக்கிதே.. அத்தோட பெருமதிப்புக்குரிய இறைப்பொருத்தமும்
கிடைக்கிதே... இப்படியான சின்ன சின்ன காரியத்துகெல்லாம் பெரியபெரிய மதிப்பு
இருக்கும் போது, பர்தா போன்றவைகளெல்லாம் முக்கியமான கட்டளைகளாக அல்லாஹ் வரையறுக்கிறான். அதை
கவனச்சிரத்தையுடன் பேணும்போது,என் இறைவனுக்காக அணிகிறேன்,
அவன் சொன்ன
வழியில் நடக்கிறேன் என்ற ஆன்மீக திருப்தியும்,அதை அணிந்து போகும்போது,
பிறர்க்கு
காட்சிப் பொருளாக இல்லாமல், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் நான் இருக்க... எனது உலக வாழ்விலும் எனக்கு சிறப்பு
கிடக்கிதே..ஆக, இது கரும்பு தின்னக்கூலி கொடுத்த மாதிரித்தானே??... என சிரித்தாள்...
என்னது சாப்டுரது மாதிரி சின்ன
விசயத்துக்கெல்லா நன்மையா? என்னப்பா சொல்ர..எதாவது நல்லது செய்தாத்தானே
பொதுவா கடவுள் நன்மை எழுதுவாறு.... இப்டில்லாமா இருக்கு? என்றாள்
வியப்பாக..
ஹதிஜாவோ..ஆமா அது நியாயம் தானே?
உதாரணமா திருடி
சம்பாதிச்சா, கடவுள் பாவம் வழங்குவார் இல்லயா?..ஆமா..என்றால் ராதிகா. அப்டீன்னா நல்ல வழியில சம்பாதிக்கிரவங்களுக்கு நன்மை
கொடுக்குறதுதானே லாஜிக்...என்றாள் ஹதிஜா...
இண்ட்ரஸ்ட்டிங்..... நான் கூட தருமம், உதவி
செய்யிரது,தொழுகுறது,.வெரதம் இருக்கிறது இதுல மட்டும்தா நன்மைன்னு
நெனச்சுட்டு இருக்கேன்..ஆனா இதையேல்லா கவனத்துல எடுத்து கடவுள் நன்மை கொடுத்தா,அப்ரம் லைஃப்ல
எல்லாத்தையுமே சர்வ சாதாரணமா செய்துட்டு..கூடவே நன்மையும் வாங்கிட்டு போயிடலாம்
போலயே..என ஆச்சிரியப்பட்டாள் ராதிகா...
ம்ம் ரொம்ப கரெக்ட் ராதி.. அதேமாதிரி..
பெண்களுக்கு இறைவன் கொடுத்த ஆடை வரைமுறை கண்ணியத்தையும்,
பாதுகாப்பையும்
வழங்குவதில் மூத்தநிலையில் இருக்கிறெதே.. அதைவிட ஆடையில் சிறந்த ஒன்றை நம்மால்
வரையறுக்க முடியுமா?..என்றாள்...
ராதிகா..இதுகுறித்த ஏதோ மனமாற்றத்தை
உணர்ந்தவளாக,பர்தா குறித்து சற்றே மனவிசாலத்துடன்
பேசத்துவங்கினாள்...
ஹதிஜா...எனக்கு இதல்லா
கேக்கும்போது, உண்மைலேயே ஆச்சிரியமா
இருக்குப்பா... ஒவ்வொரு செயலுக்கு பின்னாடியும்,ஒரு மிகப்பெரிய பொருள் இருக்கு.அதுல ஆன்மீகமும் கலந்திருக்கு, நம்மளுடைய அன்றாட வாழ்க்கையும் சரியா போகுது...கடவுளுக்கும்
நம்மள பிடிச்சுப்போகுது... எல்லாத்தையும் இஸ்லாம் ஒன்னாக்கி வச்சுருக்கேப்பா... இத
இப்போத்தா புதுசா கேள்விப்படுறேன்.
பர்தாவ, அதன் தாத்பரியங்களோட புதுஸா பாக்றேன்..இப்போ எனக்கு அதன்
மீது இருந்த பார்வை மாறியிருக்கு ஹதிஜா... பர்தா போடுரது அடிமைத்தனம்னு சொல்றதுல
எந்த அர்த்தமும் இல்ல... அதை ஒரு கலாச்சாரம்ன்னு கூட வகைப்படுத்த முடியாது, அத..அத, பெண்களுக்கான கண்ணியமான
ஆடை வரைமுறைன்னு மட்டும் சொல்லிட முடியல,அதுல ஆன்மீகம் கலந்து இருக்கு. அதுனால கடவுளோட அனுகிரகம் எப்போவும் நமக்கு
கெடச்சுட்டே இருக்கும்...
இஸ்லாமிய மதத்துல இத்தனை
பெரிய பொருண்மை அடங்கியிருக்கும்ன்னு நான் நெனச்சுக்கூட பாக்கலப்பா..எலலாரும்
ரொம்ப பெரிய விஷயமா கருதும்,விமர்சிக்கும் பர்தா,தனக்குள் இத்தனை விஷயங்களை கொண்டு இருக்க, இஸ்லாத்தின் பிறகொள்கைகள் எவ்வளவு சிறப்பா இருக்கும்ன்னு
அனுமானிக்க முடியுது.ஆனால் அதனுடைய வெளித்தோற்றம் நான் உட்பட பாக்கிறவங்களுக்கு
பலாபழமாக தெரிவதால், உள்ள இருக்கும் நலவை
அறியாமலே விலகிப்போயிடுறோம்...என்றாள் ராதிகா..
இருவரும் ஏதோ ஒரு திருப்தியுடன், சிரித்துவிட்டு...தத்தமது
செல்போன்களை பார்க்க,தலா பத்துக்கும் மேற்பட்ட மிஸ்கால்கள் வந்து
கிடந்தன...நேரமாகி இருட்டுவதை அவதானித்தவர்களாக, இருவரும் சைக்கிளை வெளியே எடுத்து வீட்டிற்கு
விரைந்தனர்...
வெகுநேரம் இருவரையும் மௌனம் கவ்விக்கொண்டது..
ஹதிஜா – தன் நிலையை ராதிகாவுக்கு புரியவைத்த
சந்தோஷத்தில் மனதுக்குள் குதூகலித்தவளாக பெரும் மகிழ்ச்சியுடன் சைக்கிளை
அழுத்திக்கொண்டிருந்தாள்... ராதிகாவோ பேசிய விசயங்களை மனதுக்குள் அசைபோட்டவளாக
உடன் வந்து கொண்டிருந்தாள்...
சிறிது நேரத்தில் ராதிகா..அந்த மூனாவது
பாயிண்ட் என்ன? என்றாள்... ஹதிஜா புரியாதவளாக எந்த பாயிண்ட்??? எனக் கேட்க...
ராதிகாவோ, அதாம்ப்பா உடம்ப மறைக்க இஸ்லாம் கொடுத்துள்ள
வரையரைல மூனாவது பாயிண்ட் என்றாள்...
ஹதிஜாவோ..எதுக்கு மூனு..மொத்தமும் சொல்றேன்னு சொல்லிட்டு..
வரிசைப்படுத்தினாள்...
முகம், கை தவிர முழு உடலும் மறைந்து
இருக்கனும்,
கண்ணாடி போன்ற மெல்லிய ஆடையாக அது இருக்கக்கூடாது.
அப்ரம் உடலோடு ஒட்டி,உடல் அங்கங்களை காட்டும்
ஆடையாக இருக்கக்கூடாது..
எதிர்பாலினத்தை தன்வசம் கவரும்
வகையான ஆடையாக இருக்கக்கூடாது...
இவ்ளோதாம்பா பர்தா...என்றாள்...
ஹதிஜா சொல்லச்சொல்ல அதை மௌனமொழியில் பின் தொடர்ந்தவளாக ராதிகாவும் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்... ஹதிஜாவின் வீட்டை இருவரும் நெருங்கவே,அங்கு இருவரின் அம்மாவும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்...
மகள் வருவதைக் கண்ட ஹதிஜாவின் அம்மா, எங்கடியா போனிய... ரெண்டுபேருமா...
ஒடனத்தவளுகள்ளா ஊடுபோயிச் சேந்துட்டாளுவ. நீங்கெ சாவகாசமா ஊர்ரோலம் வர்ரிய...ஹதிஜா
மஹரிக்கி (6 மணித்தொழுகை) முன்னாடி ஊட்டுக்கு வந்துரனும்மு சொல்லிருக்கேன்லடி.. என
கடிந்தார்.. ராதிகாவின் அம்மாவும்,ஏண்டி வர நேரமாகும்ன்னா போன்பண்ணி சொல்ல
வேண்டிதான.. எத்தன போன் பண்றது,என தன்பங்குக்கு முகம்காட்டினார்...
சரிக்கா நா கெளம்புறேன்...இவ இங்கெதா
இருப்பான்னு வந்தே...வந்ததோட பேச்சு புடிச்சுகிறுச்சு... தா...இவளும்
வந்துட்டா..அவரும் இன்னேரத்துக்கு வந்துருப்பாரு..வாடி போவோம்ன்னு தன் மகளை
அழைத்தவண்ணம் விடைபெற்றார் ராதிகாவின் தாயார்...ராதிகாவும்,வரேம்மா,வரே ஹதி என
விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள்...
போகும் வழியில்..யெம்மா...நா ஒன்னு கேக்றேன்,சொல்லேன்
என்றால் ராதிகா... என்னடி என ரோட்டை பார்த்தவண்ணம் அம்மா பதிலளிக்க,... முஸ்லிம்கள்ல்லா ஏ பர்தா போடுராகன்னு
தெரியுமாம்மா? என்றாள்...அவக மதத்துல சொல்லிருக்கு செய்ராக....என்றார்
எதார்த்தமாக...
ராதிகாவோ...அதில்லம்மா..என, தான் ஹதிஜாவிடம் கேட்டவைகளை தன் அம்மாவிடம்
சொல்ல ஆரம்பித்தாள்...
Courtesy: www.sunmarkam.blogspot.in
0 comments:
Post a Comment