அல்லாஹ் படைத்த மனித மிருக தாவர வர்க்கங்கள் அனைத்தும் பிரத்தியேக தனித்தனி அங்க அடையாளங்களுடனேயே சிருஷ்டித்துள்ளான் நமது பார்வைக்கு ஒன்றுபோல் இவை தெரிந்தாலும் ஒவ்வொரு ஜீவனும் தனித்த அடையாளங்களுடனே படைக்கப்பட்டுள்ளன இந்த அடையாளங்கள் இருப்பதால்தான் பறவைகள் விலங்குகள் தங்கள் இணைகளை அறிந்து ஒரு கூட்டமாக சமுதாயமாக வாழுகின்றன
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும் தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப்போன்ற இனமேயன்றி வேறில்லை; இன்னும் அவையாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும் -அல் குர்ஆன்-6:38
அந்த அல்லாஹ்தான் படைப்புக்கான திட்டம் வகுப்பவனும் அதனைச் செயல்படுத்துபவனும் அதற்கேற்ப வடிவம் அமைப்பவனுமாவான் -அல்குர்ஆன் 59:24
மனிதர்களும் பல்வேறு உருவ அளவிலும் பல நிறங்களிலும் முகத்தோற்றத்திலும் தங்களுக்கிடையில் அடையாளம் காண்பதற்காகவே இப்படி வித்தியாசமாகப் அல்லாஹ் படைத்திருக்கின்றான் குறிப்பாக முக அடையாளமே நடைமுறையில் பெரிதும் பயன்படுகிறது ஆனால் போர் விபத்து மற்றும் கலவர சண்டையில் உடல் உறுப்புகளை இழப்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம்
நபி (ஸல்) அவர்களுடன் உஹதுப் போரில் பங்குகொண்ட நபித்தோழர்,அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்கள் கடுமையாக போரிட்டு சஹீதானர்.அவர் (உடல் முழுவதும் சிதைந்து போனதால்) அடையாளம் அறியப்படாத நிலையில் கொல்லப்பட்டார்.அவரின் உடலில் வாளால் வெட்டப்பட்டும்,ஈட்டியால் குத்தப்பட்டும்,அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்ப்பட்ட காயங்கள் இருந்தன. அவரை அவரின் சகோதரி மச்சத்தை வைத்தோ…அல்லது கைவிரல் -அறிவிப்பவர்: அனஸ் (ரலி). நூல்: புஹாரி-4048.
1400 ஆண்டுகளுக்கு முன்பு கைவிரல் நுனி வடிவ அமைப்பை வைத்து மனிதர்களை அடையாளம் காண முடிந்தது.இந்த விரல் நுனியே இருபதாம் நுற்றாண்டிலும்,இனி வரும் இறுதிநாள் வரையிலும், அனைத்து மனிதருக்குமான தனித்துவமான (Unique Identification Data) அடையாளமாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். பொதுவாக மனிதர்களின் கைகளிலும்,விரல்களிலும் ரேகைகள் உள்ளன. உள்ளங்கை ரேகையால் உலக ஆதாய பயன் பெறுபவர்கள் கைரேகை ஜோசியர்கள் மட்டுமே. விரல் நுனி ரேகையே தடய அறிவியல் மற்றும் அனைத்து துறைகளுக்கும் பயனளிக்கிறது.